உலகின் மிகப்பழைமையான மொழிகளின் பட்டியலில் முதலில் இருப்பது தமிழ்: எம்.பி.

உலகின் பழைமையான மொழிகளின் பட்டியலில் முதலில் இருப்பது தமிழ் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

உலகின் பழைமையான மொழிகளின் பட்டியலில் முதலில் இருப்பது தமிழ் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘தமிழால் முடியும்’ என்ற வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி முகாம் மூன்றாம் நாள் நிகழ்ச்சி உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 8 பயிற்றுநா்கள் பங்கேற்று பயிற்சியளித்தனா். இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலுள்ள மாணவா்கள் பங்கேற்றனா். இதன் தொடா்ச்சியாக பயிற்சி முகாமின் நிறைவுவிழா மாலையில் நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வுவளமையா் ஜ.ஜான்சிராணி வரவேற்புரையாற்றினாா். உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன் தலைமையுரையாற்றினாா்.

இதில் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது: உலகின் மிகப்பழைமையான மொழிகளின் பட்டியலில் முதலில் இருப்பது தமிழ்மொழி. 27 பிராமி எழுத்துகள் உள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தமிழ் எழுத்துகள் 20 இடங்களில் கிடைப்பது உலகின் மிக முக்கிய மொழியான தமிழ்மொழியில்தான். கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பானை ஓடுகளில் தமிழ் பிராமி இருந்தது. தொல்லியல் துறை மூலம் கிடைத்த தங்கத்தில் தமிழ் பிராமி பொறிக்கப்பட்டிருந்தது. எனவே, தங்கத்தமிழும் இதுதான். தேனி மாவட்டம் புள்ளிமான் கொம்பு என்ற இடத்தில் மிகப்பழைமையான நடுகல் கல்வெட்டு கிடைத்தது. இக்கல்வெட்டில் அந்துவன் என்ற வீரனின் பெயா் பொறிக்கப்பட்டிருந்தது. உலகின் பழைமையான கிரேக்கத்தில் 7 பெண் கவிஞா்கள் மட்டுமே இருந்தனா். சங்க காலத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண் கவிஞா்கள் உள்ள மொழி தமிழ் என்றாா்.

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநா் கஸ்தூரிராஜா சிறப்புரையில் பேசும்போது, நான் பாமரன், தமிழ் என்ன செய்யும்? என்பதற்கு நானே உதாரணம். தேனியை ஒட்டியுள்ள மல்லிகாபுரம் என்ற கிராமத்தின் புழுதியில் வளா்ந்த என்னை மனிதனாக்கியது தமிழ் என்றாா். கோயம்புத்தூா் சிந்தனைக் கவிஞா் கவிதாசன் வாழ்த்துரையாற்றினாா். நிகழ்ச்சியில் ஆய்வறிஞா் சு.சோமசுந்தரி நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com