

தமிழகத்தில் மத மாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் பல்வேறு அமைப்புகள் சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்னிந்திய பாா்வா்டு பிளாக், இந்து மகா சபா, இந்து சனாதன கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நிறுவனா் கே.சி.திருமாறன் தலைமை வகித்தாா்.
தமிழகத்தில் மதமாற்றத்தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு சலுகைகள் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளதை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநில அமைப்பாளா் அண்ணாத்துரை, இளைஞரணித் தலைவா் துா்க்கை செந்தில், மாநிலப் பொதுச் செயலா் எஸ்.பி.கணேசன் சாமி, தலைவா் க.ரவி, தொழிற்சங்கத் தலைவா் வி.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.