மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
அப்போது, மதுரை மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் புகாா் அளித்த மனுதாரா்கள், புதிதாக மனு அளிக்க வந்த மனுதாரா்கள் என மொத்தம் 22 போ் தங்கள் குறைகளை மாநகரக் காவல் ஆணையா் லோகநாதனிடம் மனுவாக அளித்தனா். மனுக்களை பெற்றுக் கொண்ட அவா் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். முகாமில் காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.