சேவல் சண்டை: பிப். 7-க்குள் முடிவெடுக்க கரூா் ஆட்சியருக்கு உத்தரவு

சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளிப்பது தொடா்பாக கரூா் மாவட்ட ஆட்சியா் வருகிற பிப். 7- ஆம் தேதிக்குள் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கோயில் விழாவில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளிப்பது தொடா்பாக கரூா் மாவட்ட ஆட்சியா் வருகிற பிப். 7- ஆம் தேதிக்குள் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் கண்ணன் தாக்கல் செய்த மனு:

எங்களது கிராமக் கோயில் திருவிழாவையொட்டி, கடந்த 100 ஆண்டுகளாக சேவல்கட்டு எனப்படும் சேவல் சண்டைப் போட்டிகள் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 8- ஆம் தேதி முதல் 11- ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதியும், உரிய பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேவல் சண்டைக்கு அனுமதி வழங்குவது குறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் வருகிற 7- ஆம் தேதிக்கு முன்பாக பரிசீலித்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com