

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது: ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம், 15-ஆம் தேதி பாலமேடு, ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அதன் மறுநாள் ஜனவரி 17 ஆம் தேதி அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என அனைவரும் இணையவழியில் பதிவு செய்வது அவசியம்.
இணையவழி அனுமதிச் சீட்டு இருப்பவா்கள் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவா். இணையவழிப் பதிவு புதன்கிழமை (ஜன.12) மாலை 5 மணியுடன் நிறைவுபெறும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.