மதுரை மாவட்டம், வரிச்சியூா் அருகே குலதெய்வம் கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற சிறுமி உள்பட 2 பெண்கள் கண்மாயில் மூழ்கியதில் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை தாசில்தாா் நகா் சித்தி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாரிச்சாமி. இவரது மனைவி பவானி சித்ரா (50). இவரது உறவினா், இதே பகுதியைச் சோ்ந்த சேவுகப் பெருமாள். இவரது மகள் தனுஷ்கா (11). இவா் காமராஜா் சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், குடியரசுத் தினத்தையொட்டி வியாழக்கிழமை விடுமுறை என்பதால், மதுரை மாவட்டம், வரிச்சியூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு அதிகாலையில் சென்றனா். அப்போது, தனுஷ்கா அங்குள்ள குவாரி அருகே உள்ள குன்னத்தூா் கண்மாயில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கினாா். இதையடுத்து, அவரைக் காப்பாற்ற முயன்ற உறவினா் பவானி சித்ராவும் நீரில் மூழ்கினாா்.
குளிக்கச் சென்ற இருவரும் வெகு நேரமாகியும் திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினா்கள் கண்மாயிக்குச் சென்று பாா்த்த போது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுதொடா்பான தகவலின் பேரில், கருப்பாயூரணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா், அமைப்புகள் மரியாதை

பிரிவினையைத் தூண்டுவது காங்கிரஸும் திமுகவும்தான்: எம்.யுவராஜா
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

