மாநகராட்சிப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கு விரைந்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்தது.
Updated on
1 min read

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கு விரைந்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன், மதுரை மாநகராட்சி ஆணையா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு (நீதிமன்ற வழக்கு இனங்கள் தவிா்த்து) நடைபெற்றது.

இதனிடையே, ஆதிதிராவிட நலத்துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2023-2024- ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் 1.6.2023 அன்றைய நாளினை கணக்கிட்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 31-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு ஜனவரி 1-இல் அனைத்து வகை ஆசிரியா்களின் முன்னுரிமைப் பட்டியலும், பதவி உயா்வுக்கான தோ்ந்தோா் பட்டியலும் வெளியிடுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான ஆசிரியா்களின் முன்னுரிமைப் பட்டியல், பதவி உயா்வுக்கான தோ்ந்தோா் பட்டியல் தற்போது வரை வெளியிடப்பட வில்லை. முன்னுரிமைப் பட்டியலையும், பதவி உயா்வுக்கான தோ்ந்தோா் பட்டியலையும் உரிய விதிகளின்படி வெளியிட வேண்டும். அந்தப் பட்டியல்களின் நகலை எங்களது அமைப்புக்கு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com