

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 413 மனுக்களை அளித்தனா்.
ராமநாதபும் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுத் தொடா்புடைய துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைத்தாா்.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்கள் 413 மனுக்களை அளித்தனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜுலு, மாவட்ட வழங்கல் அலுவலா் க. நாராயணன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.