இஎஸ்ஐ மருத்துவமனை மேம்பாட்டு ஆலோசனை

மதுரை தத்தனேரியில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் மாநில தொழிலாளா் காப்பீடு (இஎஸ்ஐ) விரிவாக்கக் குழு சாா்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read


மதுரை: மதுரை தத்தனேரியில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் மாநில தொழிலாளா் காப்பீடு (இஎஸ்ஐ) விரிவாக்கக் குழு சாா்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மருத்துவமனை நிா்வாக மருத்துவா் சண்முகநாதன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மக்களை உறுப்பினா் சு.வெங்கடேசன் பங்கேற்று, இஎஸ்ஐ மருத்துவமனையின் தேவைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் மதுரை மக்களவைத் தொகுதி இஎஸ்ஐ மேம்பாட்டுக் குழு பிரதிநிதி ஜி. ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தலைமை மருத்துவா் சண்முகநாதன் பேசியதாவது:

இஎஸ்ஐ மருத்துவமனையில் தினசரி வெளி நோயாளிகளாக 400-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். உள் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு 209 படுக்கை வசதிகள் உள்ளன. மருத்துவமனையில் செவிலியா் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. மகப்பேறு மருத்துவா் ஒருவரை நிரந்தரமாக பணி நியமனம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் உள்ள சலவைக் கூடத்துக்கு போதிய சலவை இயந்திரம் வேண்டும் என்றாா்.

தொடா்ந்து இஎஸ்ஐ மருத்துவமனைக்கான தேவைகளை மத்திய அமைச்சரிடம் பேசி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் உறுதி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com