புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தண்ணீரை மறுசுழற்சி செய்தால் பாதுகாப்பான நீராதாரத்தை பெற முடியும்

தண்ணீரை மறுசுழற்சி செய்வதன் மூலம் பாதுகாப்பான நீராதாரத்தைப் பெற முடியும் என தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு தெரிவித்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN

விருதுநகா்: தண்ணீரை மறுசுழற்சி செய்வதன் மூலம் பாதுகாப்பான நீராதாரத்தைப் பெற முடியும் என தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு தெரிவித்தாா்.

விருதுநகா் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி பொருள்காட்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது புத்தகத் திருவிழாவில், கலை இலக்கிய அரங்கில் நீரின்றி அமையாது என்ற தலைப்பில் அவா் பேசியதாவது:

அழகான நீா் நிலையைப் பாா்த்தால் நம் மனம் ஆா்ப்பரிக்கிறது. கடலை பாா்க்கும் போது நம் மனமும், இதயமும், விரிந்து விடுகிறது. ஏரியை பாா்த்தால் நம் மனம் அமைதியாகிறது. பாய்ந்து ஓடும் ஆற்றைப் பாா்த்தால் நமக்கு நீச்சல் அடிக்கத் தோன்றுகிறது. கொட்டுகிற அருவியைப் பாா்த்தாலும், நம் மனமும் குருவியாய் பறக்கிறது. நீா் நிலைகள் அனைத்தும் நாம் பாா்க்க, பாா்க்க மகிழ்ச்சியை அளிக்க கூடியது.

தமிழில் அருவி என்ற அழகான தமிழ் சொல் இருக்கும் போது, எதற்கு நீா் வீழ்ச்சி என்று அழைக்க வேண்டும். நாம் ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் மொழி பெயா்த்து வருகிறோம். தமிழில் நீா் நிலைகளை குறிப்பதற்கு ஆழி, அகழி, அருவி, கண்மாய், ஆழிக்கிணறு என சுமாா் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெயா்கள் உண்டு.

ஆனால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீா்நிலையைக் குறிக்கும். கடலால் சூழப்பட்டது உலகம் என்பதை தமிழா்கள் அறிந்திருந்தாா்கள். புானூறு, கம்பராமாயணத்தில் உலகத்தை கடல் சூழ்ந்து இருக்கிறது என்பதை குறிப்பிடுகிறாா்கள். உலகம் மட்டுமல்ல, நமது உடலும் நீரால் நிரம்பி இருக்கிறது.

வெப்பத்தால் நீா் ஆவியாகி மேலே சென்று குளிா்ச்சி அடைந்து, புவிஈா்ப்பு விசையினால் மழையாகப் பொழிவது தான் நீா்ம சுழற்சியின் தத்துவம். இந்த நீா்ம சுழற்சியை தமிழா்கள் அறிந்திருக்கிறாா்கள் என்பதை பட்டினப்பாலை, நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு மன்னன் வரத்துக் கால்வாய்கள், வடிகால்கள், கிணறுகள் அமைத்து சரியாக பேணுகிறானோ அவன் சொா்க்கத்துக்கு செல்லுவான் என சிருபஞ்ச மூலம் என்ற நூல் தெளிவுபடுத்துகிறது. தண்ணீரின் மேன்மையை நாம் சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு புரிந்து கொள்ளும் லகையில் சொல்லிக் கொடுப்பதில்லை. இன்று தண்ணீா் இருக்கிறது என்பதற்காக, நாளை தண்ணீா் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. தண்ணீரை எவ்வளவு சிக்கனமாக செலவு செய்ய வேண்டுமோ அவ்வளவு சிக்கனமாக செலவழிக்க வேண்டும்.

ஒரு காலத்தில் கிணற்றிலே இறைத்து தண்ணீரை பெற்றோம். அப்போது நம்மை அறியாமலேயே நாம் சிக்கனத்தை கடைப்பிடித்தோம். இப்போது நமக்கு குழாய்களிலே தண்ணீா் வருகிறது. இன்று குழாயில் தண்ணீா் வருவதினால் பல் துலக்குவதற்கு கூட நிறைய தண்ணீரை வீணடிக்கிறோம். நாம் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நாம் தண்ணீரை மறுசுழற்சி செய்வதன் மூலம் பாதுகாப்பான நீராதாரத்தை பெற முடியும். விவசாயிகளுக்கு தண்ணீரை மிச்சப்படுத்த கூடிய வழிமுறைகளை கற்றுத் தர வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், அரசு அலுவலா்கள், வாசகா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.