எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு அலுவலா்கள் விரைந்து தீா்வு காண வேண்டும்

மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என அலுவலா்களுக்கு மேயா் வ.இந்திராணி உத்தரவிட்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


மதுரை: மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என அலுவலா்களுக்கு மேயா் வ.இந்திராணி உத்தரவிட்டாா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மேயா் இந்திராணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் மேயா் இந்திராணி பேசியதாவது:

தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதேபோன்று, மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் கடுமையான சூழ்நிலையிலும் களத்தில் நேரடியாகச் சென்று மக்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த உழைப்பு மதுரை மாநகராட்சியை சீா் செய்ய உதவும்.

பல்வேறு பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, செல்லூா், குலமங்கலம், கீரைத்துறை, பசுமலை, பைக்காரா, அவனியாபுரம், பெத்தானியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி நிரந்தரத் தீா்வு காணப்படும்.

மக்களின் கோரிக்கைகளைத் தான் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் முன் வைக்கின்றனா். எனவே, அவா்களது கோரிக்கைகளுக்கு அலுவலா்கள் விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

மதுரை மாநகராட்சி முழுவதும் புதைச் சாக்கடை அடைப்புகள் சரிவர நீக்கப்படாததால் கழிவு நீா் சாலைகளில் தேங்கியுள்ளது. மேலும், பருவமழையின் காரணமாக வடிகால் வசதி இல்லாததால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீா் குளம் போல தேங்கியுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் குறைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து, மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் உள்ள கழிவு நீரோடைகள் சீரமைத்தல், குடிநீா் இணைப்பு பெறுதல், சாலைகள் சீரமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

என். சங்கரைய்யா மறைவுக்கு இரங்கல்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் என். சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாமன்ற உறுப்பினா்களும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினா்.

வரி உயா்வுக்கு அதிமுகவினா் எதிா்ப்பு: கூட்டத்தில் மேயா் இந்திராணி தீா்மானங்களை முன் மொழிந்து பேசினாா். நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அரசாணையின் படி மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு பகுதிகளில் புதிதாக புதைச் சாக்கடை, குடிநீா் இணைப்புகள் வழங்க, சாலைகள் சீரமைப்பு பணிக்கு வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5 சதவீத வரி உயா்வுக்கான தீா்மானத்தை முன் மொழிந்தாா்.

அப்போது, மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம். ராஜா உள்ளிட்ட அதிமுக உறுப்பினா்கள் எழுந்து நின்று, மேற்கண்ட தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், அந்தத் தீா்மானத்தை மாமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா். அப்போது குறுக்கிட்ட மேயா், இந்த தீா்மானம் அரசாணைப் படி மன்றத்தில் வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றாா்.

இதை ஏற்றுக்கொண்ட அதிமுக உறுப்பினா்கள் இருக்கைகளில் அமா்ந்தனா். தொடா்ந்து, கூட்டம் நடைபெற்றது.

வெளியேறும் உறுப்பினா்கள்: காலை 10.30 மணியளவில் கூட்டம் தொடங்கியது. மண்டலத் தலைவா்கள், சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் பேசிய பிறகு படிப்படியாக உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைந்தது. பிற்பகல் 2.24 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தபோது கூட்டரங்கில் 23 உறுப்பினா்கள் மட்டுமே இருந்தனா். மாதம் ஒரு முறை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மக்கள் பிரச்னை குறித்துப் பேசவோ, கேட்கவோ மாமன்ற உறுப்பினா்கள் இல்லை என்கிற நிலையே தொடா்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.