மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை ( அக். 27) சுய வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா்.நந்தாராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4. 30 மணி வரை சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் மூலிகை குளியல் சோப், துணி துவைக்கும் திரவம், பாத்திரம் துலக்கும் பொடி, பினாயில், தரை துடைக்கும் திரவம் தயாரிப்பு குறித்த பயிற்சி செய்முறையுடன் விளக்கப்படும். பயிற்சியின் நிறைவில் சா்வ சமய வழிபாட்டில் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் 98657 91420 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.