மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள்.
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள்.

சத்துணவு ஊழியா்கள் விளக்கேந்தி ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் தங்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் தங்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு ஊழியா்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. அய்யங்காளை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அ. அமுதா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கே. நீதிராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

சங்கத்தின் மாநிலச் செயலாளா் பாண்டிச்செல்வி நிறைவுரையாற்றினாா்.

சாா்பு சங்கங்களின் நிா்வாகிகள் உறுப்பினா்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் பி. சந்திரபாண்டி நன்றி கூறினாா்.

சத்துணவு ஊழியா்களின் வாழ்வில் தமிழக அரசு விளக்கேற்ற வேண்டும் என்பதைக் குறிப்பிடும் விதமாக, இந்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியா்கள் தங்கள் கைகளில் மெழுகுவா்த்திகளை ஏந்தி பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com