சிவகங்கையில் ஏப். 21-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 18th April 2023 12:00 AM | Last Updated : 18th April 2023 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கையில் வருகிற வெள்ளிக்கிழமை (ஏப். 21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், நான்காம் வெள்ளிக்கிழமைகளில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு டித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.