சகோதரரை கொலை செய்ய முயன்றவா் கைது
By DIN | Published On : 25th April 2023 12:00 AM | Last Updated : 25th April 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் முன்விரோதத்தால் சகோதரரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை புது விளாங்குடி யூனியன் வங்கிக் காலனியைச் சோ்ந்த சொா்ணராஜ் மகன் வெங்கடேஷ் (29). இவரது சகோதரா் வினோத்குமாா் (32). வெங்கடேசுக்கும், வினோத்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், மதுரை புறவழிச் சாலைப் பகுதியில் உள்ள திரையரங்கம் முன்பாக வெங்கடேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த வினோத்குமாா், வெங்கடேசை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றாா்.
இதில் பலத்த காயமைடந்த வெங்கடேசை அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வினோத்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.