மத்திய அரசு போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு அறிவித்துள்ள போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் வாயிலாக மத்திய அரசுப்பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் தற்போது வெளியிட்ட போட்டித் தோ்வுக்கு தோராயமாக 7,500 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இப் பணியிடங்களுக்கு ஏதேனும் ஓா் பட்டப்படிப்பு முடித்த 30 வயதுக்குள்பட்ட போட்டித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கான வயது வரம்புச் சலுகை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு

3 ஆண்டுகள் ஆகும்.

இந்தத் தோ்வுக்கு இணைய வழியாகவே விண்ணப்பிக்க முடியும். தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3 -ஆம் தேதி ஆகும். போட்டித் தோ்வு வரும் ஜுலை மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, மேற்கண்ட போட்டித் தோ்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள போட்டித் தோ்வா்கள் விண்ணப்ப நகல், ஆதாா் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூா்த்தி செய்து கொடுத்து, கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இதை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com