மதகுபட்டி பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 25th April 2023 11:40 PM | Last Updated : 25th April 2023 11:40 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் வியாழக்கிழமை (ஏப். 27) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை கோட்ட செயற்பொறியாளா் ஏ. கே. முருகையன் வெளியிட்ட
செய்திக் குறிப்பு :
மதகுபட்டி துணை மின் நிலையத்தில் பட்டமங்கலம் உயரழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே மதகுபட்டி, தச்சம்பட்டி, ராமலிங்கபுரம், காடனேரி, அம்மன்பட்டி, ஒக்கூா், காளையாா்மங்கலம், அய்யம்பட்டி, கொழுக்கட்டைப்பட்டி, அண்ணா நகா், ஒ.புதூா், நாலுகோட்டை, கருங்காப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.