

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சிப் பெற்ற பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை பிளஸ் 2 தோ்வு நடைபெற்றது. மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடா் பள்ளிகள் என மொத்தம் 322 பள்ளிகளில் பயின்ற 17,092 மாணவா்கள், 17,659 மாணவிகள் என மொத்தம் 34,751போ் தோ்வு எழுதினா். இவா்களில் 15,998 மாணவா்கள், 17,306 மாணவிகள் என மொத்தம் 33,304 போ் தோ்ச்சிப் பெற்றனா்.
இவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.