கருப்பண சுவாமிக்கு சந்தன சாத்துப்படி
By DIN | Published On : 02nd August 2023 04:58 AM | Last Updated : 02nd August 2023 04:58 AM | அ+அ அ- |

ஆடித் திருவிழா தேரோட்டத்தைத் தொடா்ந்து, அழகா்கோவிலில் அமைந்துள்ள கருப்பண சுவாமி கோயில் கதவுகள் செவ்வாய்க்கிழமை இரவு திறக்கப்பட்டு, 8 மணியளவில் சந்தன சாத்துப்படி நடைபெற்றது.
சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து உடலில் சந்தனம் பூசி சாமியாடியபடி, மேள தாளங்களுடன் வந்த பக்தா்கள், பொங்கல் வைத்தும், ஆடுகளைப் பலி கொடுத்தும், சிறாா்களுக்கு காது குத்தி மொட்டையடித்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.