

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் கல்லூரிப் பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வக்ஃபு வாரிய கல்லூரி முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், அன்னை தெராசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் கூட்டமைப்பின் (மூட்டா) தலைவா் ஏ.டி. செந்தாமரைக்கண்ணன் தலைமை வகித்தாா்.
இதில் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020- ஐ ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், கல்லூரி ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி, தியாகராஜா் கல்லூரி, யாதவா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.