குறுவட்ட கையுந்து பந்துப் போட்டிகள்
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

மேலூா்: குறுவட்ட அளவிலான கையுந்து பந்துப் போட்டிகள் அழகா்கோவில் சுந்தரராஜ மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேலூா் கல்வி மாவட்டத்தில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற இந்தப் போட்டிகளை கள்ளழகா் கோயில் துணை ஆணையா் ராமசாமி முன்னிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.
19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் சுந்தராஜ மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், மேலூா் ஜாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தையும், 17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் சுந்தரராஜ மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும், தெற்குத் தெரு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் வென்றனா்.
19 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் திருவாதவூா் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், மேலூா் மில்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இரண்டாம் இடத்தையும் வென்றனா். 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் திருவாதவூா் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், தனியாமங்களம் அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.