சிறாா் வன்கொடுமை: கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறாா் வன்கொடுமைக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள்.
மதுரை: மதுரையில் ரோட்டரி சங்கங்கள், லேடி டோக், பூவந்தி மீனாட்சி பயோனியா் மகளிா் கல்லூரிகள் சாா்பில் சிறாா் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மடீட்சியா அரங்கம் முன் பேரணியை மதுரை மாநகர போக்குவரத்துக் காவல் கூடுதல் துணை ஆணையா் திருமலைக்குமாா், உதவி ஆணையா் ரமேஷ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
ரோட்டரி சங்கத்தின் ஆளுநா் ஆனந்த ஜோதி, ஆளுநா் தோ்வு ராஜா கோவிந்தசாமி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கலந்து கொண்ட மாணவிகள் சிறாா்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து காந்தி நினைவு அருங்காட்சியகம் முன் நிறைவு பெற்றது.