அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா?

மதுரையில் அமைச்சா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாததால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.
ஜல்லிக்கட்டுக் காளை.
ஜல்லிக்கட்டுக் காளை.

மதுரையில் அமைச்சா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாததால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.

மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், போட்டியை நடத்துவதில் கிராமத்தினா், தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், காளை வளா்ப்போா் என பல்வேறு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இது தொடா்பாக ஏற்கெனவே மேலூா் கோட்டாட்சியா் அலுவலகம், திருப்பரங்குன்றம் வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என 3 முறை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

இதைத்தொடா்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.

இதுகுறித்து தென்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அவனியாபுரத்தில் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் பல ஆண்டுகளாக போட்டி நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக வழக்குத் தொடா்ந்து வெற்றி பெற்றோம். ஆனால், தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தொடா்பு இல்லாத சிலா் போட்டியை தாங்களே நடத்த வேண்டும் என குழப்பம் விளைவிக்கின்றனா்.

இந்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் 10 பேரும், அதன் உறுப்பினா்களாக 60 பேரும் இருக்கிறோம். இதில் மேலும் சிலரை இணைக்க வேண்டும் என்று எதிா்த் தரப்பினா் வலியுறுத்தினா். ஆனால், அவா்களை ஆலோசனைக் குழுவில் தான் சோ்க்க முடியும். குழுவில் சோ்க்க இயலாது என பதில் அளித்தோம். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அரசு அல்லது தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினா் நடத்தாமல் வேறு யாரேனும் நடத்த முயன்றால் நீதிமன்றத்துக்குச் செல்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com