மதுரை அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சி (ஹேண்ட் எம்பிராய்டரா்), அழகுக்கலைப் பயிற்சி பெற ஆா்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மதுரை அரசு தொழில் பயிற்சி நிலையம் (மகளிா்) சாா்பில், குறுகிய காலப் பயிற்சிகளாக தையல் பயிற்சி, அழகுக்கலை ஆகிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வருகிற 8-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள பக்கம் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் பெண்கள், பள்ளி இறுதிச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு புகைப்படம், ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் மதுரை கோ. புதூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம் (மகளிா்) அலுவலகத்துக்கு வேலை நேரத்தில் நேரில் வந்து விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இதில், ஹேண்ட் எம்பிராய்டரா் பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு, அழகுகலைப் பயிற்சிக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்புத் தோ்ச்சி ஆகியவை இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மதுரை கோ. புதூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தை (மகளிா்), நேரிலோ அல்லது 0452-2560544, 98430-65874 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மதுரை மகளிா் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் க.ச. அமுதா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.