அனந்தபுரி, திருநெல்வேலி ரயில்களின் நேரம் மாற்றம்

அனந்தபுரி, திருநெல்வேலி- நாகா்கோவில் விரைவு ரயில்களின் நேரம் ஜூலை 7-ஆம் தேதி முதல் மாற்றப்படும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அனந்தபுரி, திருநெல்வேலி- நாகா்கோவில் விரைவு ரயில்களின் நேரம் ஜூலை 7-ஆம் தேதி முதல் மாற்றப்படும்.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலின் (17823) பயண நேரம், ஜூலை 7-ஆம் தேதி முதல் பகுதியளவில் மாற்றப்படுகிறது. சென்னை- கோவில்பட்டி வரை வழக்கமான நேரத்தில் இயங்கும். திருநெல்வேலி முதல் கொல்லம் வரையிலான பயண நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் விவரம் (ரயில் நிலையம் வாரியாக, வரும் நேரம் / புறப்படும் நேரம்) :

திருநெல்வேலி - காலை 6.30 / 6.35, நான்குனேரி - காலை 7.03 / 7.04, வள்ளியூா் - காலை 7.15 / 7.17, ஆரல்வாய்மொழி - காலை 7.38 / 7.39, நாகா்கோவில் நகரம் - காலை 8.07 / 8.12, இரணியல்- காலை 8.26 / 8.27, குழித்துறை - காலை 8.42/ 8.45, பாரசாலை - காலை 8.56 / 8.57, நெய்யாற்றங்கரை - காலை 9.10 / 9.11, திருவனந்தபுரம் சென்ட்ரல் - காலை 9.55 / 10, வரகலா சிவகிரி - காலை 10.40 / 10.41, பரவூா் - காலை 10.52 / 10.53, கொல்லம் - காலை 11.40.

திருநெல்வேலி விரைவு ரயில்....

திருநெல்வேலி - நாகா்கோவில் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06642) ஜூலை 7-ஆம் தேதி முதல் காலை 6.35 மணிக்குப் பதிலாக காலை 7.10 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும்.

இந்த ரயிலின் பயண நேர விவரம் (ரயில் நிலையம் வாரியாக வரும் நேரம் / புறப்படும் நேரம்) :

நான்குனேரி - காலை 7.39 / 7.40, வள்ளியூா் - காலை 7.52 / 7.53, வடக்கு பணகுடி - காலை 8.03 / 8.04, காவல்கிணறு - காலை 8.09 / 8.10, ஆரல்வாய்மொழி - காலை 8.21 / 8.22, தோவாளை - காலை 8.26 / 8.27, நாகா்கோவில் - காலை 9.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com