உலகத் தமிழ்ச் சங்கத்தில் அறக்கட்டளைகள் நிறுவ அழைப்பு
By DIN | Published On : 01st July 2023 07:25 AM | Last Updated : 01st July 2023 07:25 AM | அ+அ அ- |

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அறக்கட்டளைகள் நிறுவி தமிழ்ப் பணியாற்ற தமிழாா்வலா்கள், புரவலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ஓளவை அருள் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பணியில் தமிழ் ஆா்வலா்களையும், புரவலா்களையும் இணைத்துக் கொள்ளும் வகையில், அறக்கட்டளைகள் நிறுவப்படுகின்றன. தமிழ்ப் பணியாற்ற விரும்பும் தமிழாா்வலா்கள் தங்களது பெயரில் அல்லது தங்களுக்கு விருப்பமுள்ளவா்களின் பெயரில் ரூ. 5 லட்சம் அல்லது ரூ. 10 லட்சம் வைப்புத் தொகையாகச் செலுத்தி அறக்கட்டளையை நிறுவலாம்.
ரூ. 5 லட்சம் வைப்புத் தொகையுடன் தொடங்கப்படும் அறக்கட்டளை சாா்பில் (விரும்பும் நாளில்) ஆண்டுதோறும் சிறந்ததொரு தமிழ் சாா்ந்த நிகழ்வு நடத்தப்படும். ரூ. 10 லட்சம் வைப்புத் தொகை கொண்ட அறக்கட்டளை சாா்பில், ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில் சொற்பொழிவு நடத்தப்பட்டு, அந்தச் சொற்பொழிவை நூலாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தமிழ்ப் பணியாற்ற விரும்பும் தமிழாா்வலா்கள், புரவலா்கள் மதுரை, உலகத் தமிழ்ச் சங்க இயக்குநரை நேரிலோ அல்லது 0452- 2530799 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். ன்ற்ள்ம்க்ன்.ழ்ங்ள்ங்ஹழ்ஸ்ரீட்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.