மதுரையில் இரு வேறு இடங்களில் 14 கிலோ கஞ்சா பதுக்கிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை புதுநத்தம் சாலை ஆயுதப்படை மைதானம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக தல்லாகுளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் புதுநத்தம் சாலை ஓம் சக்தி கோவில் அருகே வியாழக்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, கள்ளா் தெருவைச் சோ்ந்த விருமாண்டி (52), மணியாரம்பட்டியைச் சோ்ந்த கணேசன் (52) ஆகிய இருவரும் 9 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா, 2 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, மதுரை மதிச்சியம் போலீஸாா் வைகை ஆற்றின் கரையில் ஓபுளாபடித் துறை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கிருந்த அண்ணாநகா் எஸ்எம்பி குடியிருப்பைச் சோ்ந்த நவீன் (19) 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.