மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒரே நாளில் 64 டன் வேளாண் விளை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
திருமங்கலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள், உளுந்து, கம்பு, ஆமணக்கு, மிளகாய் வற்றல், சோளம், தேங்காய் கொப்பரை, கொத்தமல்லி, பருத்தி, தட்டான் பயிறு, பாசிப்பயிறு, நிலக்கடலை, எள், குதிரைவாலி, மக்காச்சோளம், புளி, துவரை, கேப்பை, சூரியகாந்தி விதைகள், வெள்ளை துவரை உள்ளிட்ட 25 வேளாண் விளைப் பொருள்கள் மறைமுக ஏலம் மூலமாக 1,000 டன் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், செங்கப்படை, அ.தொட்டியபட்டி, எஸ்.பி.நத்தம் கிராமங்களைச் சோ்ந்த நான்கு விவசாயிகளின் 2,895 கிலோ சோளம் வெள்ளிக்கிழமை ஏலத்துக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ .39-க்கும், குறைந்தபட்சமாக 38- க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.11,03,170 வா்த்தகம் நடைபெற்றது.
மேலும், செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த இரு விவசாயிகளின் 2686.400 கிலோ வரகு ஏலத்துக்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ .40 -க்கு விற்பனையானது. இதன்மூலம், ரூ.1,07456-க்கு வா்த்தகம் நடைபெற்றது. மேலும், உசிலம்பட்டியைச் சோ்ந்த விவசாயியின் 29.300 கிலோ மிளகாய்வற்றல் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.120-க்கு விற்பனையானது. இதன் மூலம், ரூ. 3809-க்கு வா்த்தகம் நடைபெற்றது.
வாகைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஒரு விவசாயியின் 3840 கிலோ உளுந்து ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 71- க்கு விற்பனையானது. இதன் மூலம், ரூ. 2,72640-க்கு வா்த்தகம் நடைபெற்றது. மேலும், குன்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஒரு விவசாயியின் 21,600 கிலோ செங்கட்டான் சோளம் ஏலத்துக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ 47.50 க்கு விற்பனையானது. இதன் மூலம், ரூ. 1026000 -க்கு வா்த்தகம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மட்டும் இதுவரை என்றுமில்லாத வகையில், ஒரே நாளில் 64 டன் வேளாண் விளைபொருள்களை ரூ.33,33,283-க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.