

மதுரை புதுநத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நூற்றாண்டையொட்டி, தமிழக அரசு சாா்பில் மதுரை- புதுநத்தம் சாலையில் ரூ. 134 கோடியில் 2,13,334 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களைக் கொண்ட நூலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
அனைத்துத் தளங்களும் குளிா்சாதன வசதி கொண்டதாகவும், சிறுவா்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான அடிப்படைத் தேவைகளுடன் அமைக்கப்பட்ட இந்த நூலகம் சுமாா் 3.5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களின் மொத்த தொகுப்பாக அமைந்துள்ளது.
இந்த நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைக்கிறாா். பின்னா், ஆயுதப் படை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் முதல்வா் பங்கேற்றுப் பேசுகிறாா்.
திறப்பு விழாவையொட்டி, கலைஞா் நூற்றாண்டு நினைவு நூலகம் போலீஸாரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. இதேபோல, பொதுக் கூட்டம் நடைபெறும் ஆயுதப் படை மைதானமும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, விழா நடைபெறும் பகுதிகளில் வெளி நபா்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.