திருச்சி ரயில் சந்திப்பில் நடைபெறும் பொறியியல் பணிகளுக்காக திருச்சி- மதுரை மாா்க்க ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் எம்.கே. கோபிநாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
திருச்சிராப்பள்ளி சந்திப்பில் கூடுதல் ரயில் பாதைக்கான பொறியியல் பணிகள் நடைபெறுவதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சில ரயில்களின் பயண வழித் தடமும், பயண நேரமும் மாற்றப்பட்டுள்ளன.
நாகா்கோவில் - மும்பை (16352) ரயில் கரூா், சேலம், ஜோலாா்பேட்டை, ரேணிகுண்டா வழித்தடத்தில் இயங்கும். இந்த ரயிலின் அருப்புக்கோட்டை நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயில் (16127) விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் என்ற வழித் தடத்தில் இயங்கும்.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் (16847)
மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழித் தடத்தில் இயங்கும்.
இந்த ரயில் மறுமாா்க்கத்தில் (ரயில் எண் 16848) விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூா், மயிலாடுதுறை என்ற வழித்தடத்தில் இயங்கும்.
ராமேசுவரம்- புவனேஸ்வா் விரைவு ரயில் (20895) காரைக்குடி, திருவாரூா், மயிலாடுதுறை வழித்தடத்தில் இயங்கும்.
நேரம் மாற்றம்....
மதுரை- சென்னை தேஜஸ் விரைவு ரயில் (22672) மதுரையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 4.15 மணிக்குப் புறப்படும். புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861) திருச்சி ரயில் நிலையத்துக்கு முன்பாக சுமாா் 30 நிமிஷங்கள் நிறுத்தப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.