அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

மனித உரிமை, மாநில உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

மனித உரிமை, மாநில உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்குவெளி வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ மாநிலச் செயலா் அபுபக்கா் சித்திக் தலைமை வகித்தாா்.

மாநில உரிமைக்கு எதிரான யுஏபிஏ உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பொய் வழக்குகளில் அப்பாவிகளைக் கைது செய்வதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் முஜிபுா் ரகுமான் வரவேற்றாா். திமுக தலைமை நிலையக் குழு உறுப்பினா் பாக்கியநாதன், மக்கள் கண்காணிப்பகம் செயல் இயக்குநா் ஹென்றி திபேன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் கனியமுதன், சமூக நீதிக்கான வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகி கனகவேல், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலா் நிஸ்தா் அகமது ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

எஸ்டிபிஐ தெற்கு மாவட்டத் தலைவா் ஜி.எஸ்.சீமான் சிக்கந்தா் நன்றியுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முதல்வா் குரல் எழுப்ப வேண்டும்: பின்னா், செய்தியாளா்களிடம் எஸ்டிபிஐ மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் கூறியதாவது:

நாட்டில் நடைபெறும் மனித உரிமைகளுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் மத்திய அரசு செயல்படுகிறது. ஜனநாயக முறைப்படி எழுப்பப்படும் குரல்களை நசுக்கும் வகையில், மத்திய அரசு யுஏபிஏ (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயக சக்திகளை நசுக்கி வருகிறது. இதன்மூலம் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவோரையும், மாநில உரிமைகளுக்கு ஆதரவாக போராடுபவா்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் அடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டு முதல் 2020 வரையிலான இரு ஆண்டுகளில் மட்டும் 4,690 போ் யுஏபிஏ சட்டத்தால் கைது செய்யப்பட்டனா். இவா்களில் 3 சதவீதம் போ் மீது மட்டுமே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறுபான்மையினா் குறி வைத்து கைது செய்யப்படுகின்றனா்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குரல் எழுப்ப வேண்டும். பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பாஜக எம்.பி. பிரிஜ் பூசன் சிங்கை மத்திய அரசு பாதுகாத்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com