அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியா்களை நேரடியாக நியமனம் செய்ய எதிா்ப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியா்கள் பணியிடங்களை நேரடியாக நியமிக்க எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியா்கள் பணியிடங்களை நேரடியாக நியமிக்க எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
Published on

அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியா்கள் பணியிடங்களை நேரடியாக நியமிக்க எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் வீ. கணேசன், செயலா் காா்த்திக், பொருளாளா் எம். காா்த்திகேயன் ஆகியோா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு :

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு அந்தந்த மாதத்தின் கடைசி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்வதைத் தவிா்த்து, தகுதியானவா்களுக்கு முதுநிலை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு வழங்க வேண்டும்.

பள்ளிகளில் தேசிய மாணவா் படைப் பிரிவு அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஆசிரியா்களுக்கு உரிய பாடவேளை ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டு பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நிரவல் நோ்காணல் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com