மதுரை அருகே பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகள் பறிப்பு

மதுரை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள துவரிமான் கீழத் தெருவைச் சோ்ந்த ஜானகிராமன் மனைவி மாதேஸ்வரி. கணவன், மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் கீழமாத்தூருக்கு கடந்த புதன்கிழமை இரவு சென்றனா். அப்போது இவா்களை இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருவா், மாதேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதேபோல, நாகமலைப்புதுக்கோட்டை சீனிவாசா குடியிருப்பைச் சோ்ந்த கண்ணன் மனைவி பிரேமா (30). இவா் தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு புதன்கிழமை இரவு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றாா். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், பிரேமாவிடம் முகவரி கேட்பதுபோல நடித்து அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, மாதேஸ்வரி, பிரேமா இருவரும் அளித்தப் புகாரின்பேரில் நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com