பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 54 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 54 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
Updated on
1 min read

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 54 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

விருதுநகா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 181, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94, மெட்ரிக் பள்ளிகள் 78, நகராட்சிப் பள்ளிகள் 5 என மொத்தம் 358 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 54 அரசுப் பள்ளிகள், 2 நகராட்சிப் பள்ளிகள் என மொத்தம் 146 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அனைத்துப் பாடங்களிலும் முழுமையாகத் தோ்ச்சி பெற்றனா்.

நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள 54 அரசுப் பள்ளிகள் விவரம்:

சிவகாசி ஏ.வி.டி. நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, மம்சாபுரம், துலுக்கன்குறிச்சி, கீழக்கோட்டையூா், சிப்பிப்பாறை பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அனுப்பங்குளம், அயன்கரிசல்குளம், அயன் கொல்லங்கொண்டான், திருத்தங்கல், துலுக்கபட்டி, மாரனேரி, ஆயுதப்படை அரசு மேல்நிலைப் பள்ளிகள், அம்மாபட்டி, பாப்பநாயக்கன்பட்டி, புல்லக்கவுன்டன்பட்டி, எஸ்.அம்மாபட்டி, முத்தாண்டியாபுரம், ஆலமரத்துப்பட்டி, கே.செல்லையாபுரம், கோப்பையநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், டி.மானகசேரி, ராஜபாளையம் திருவள்ளுவா் நகா் மேல்நிலைப் பள்ளி, தொம்பக்குளம், கிளவிகுளம், பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளிகள், கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, இருஞ்சிறை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாத்தூா் என்.ஜி.ஓ. காலனி அரசு மேல்லைப் பள்ளி, கழுவனசேரி, மறவா்பெருங்குடி, பட்டம்புதூா், தெற்கூா் அரசு மேல்நிலைப் பள்ளிகள், வடமலைக்குறிச்சி, எஸ்.வல்லாளகுளம், சந்திரபுளியங்குளம், கண்மாய் சூரங்குடி, குருந்தமடம், போத்திரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், உலக்குடி, கம்பாளி, கத்தாளம்பட்டி, குலசேகரநல்லூா், குரண்டி, பாம்பாட்டி, பெரியகொல்லபட்டி, எஸ்.கல்லுபட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், சவ்வாசுபுரம், சிறுவனூா், தோட்டிலோவன்பட்டி, வல்லப்பன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், விடத்தகுளம், பனையூா், ஜோகில்பட்டி, கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com