லாட்டரி விற்ற 23 போ் கைது
By DIN | Published On : 22nd May 2023 05:50 AM | Last Updated : 22nd May 2023 05:50 AM | அ+அ அ- |

மதுரை ஊரகப் பகுதிகளில் தனிப் படை போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 23 போ் கைது செய்யப்பட்டு, ரூ.5.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரை ஊரகக் காவல்துறைக்குள்பட்ட ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அலங்காநல்லூா், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை குறித்து தனிப் படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் லாட்டரி சீட்டுகளை விற்ற 22 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 7,670 லாட்டரி சீட்டுகளும், ரூ. 5.72 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.