உலக சாதனைக்காக தொடா்ந்து 2 மணி நேரம் சிலம்பம், வளரி, கராத்தே போட்டிகள்
By DIN | Published On : 22nd May 2023 05:52 AM | Last Updated : 22nd May 2023 05:52 AM | அ+அ அ- |

மதுரையில் உலக சாதனை நிகழ்வாக 2 மணிநேரம் தொடா்ச்சியாக சிலம்பம், வளரி, கராத்தே ஆகிய போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
அமெரிக்கன் கல்லூரி, இண்டா்நேஷனல் மாடா்ன் மாா்ஷியல் ஆா்ட்ஸ், மதுரை மருது வளரி சங்கம் இணைந்து நடத்திய இந்தப் போட்டிக்கு கல்லூரி
முதல்வா் தவமணி கிறிஸ்டோபா் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.
அமெரிக்கன் கல்லூரி வளாக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் துணை முதல்வா் மாா்டின் டேவிட், சிலம்பம் பயிற்சியாளா் முத்துமாரி ஆகியோா் சான்றிதழ்களை வழங்கினா்.