பைக் பந்தயம்: 14 போ் கைது
By DIN | Published On : 24th May 2023 05:10 AM | Last Updated : 24th May 2023 05:10 AM | அ+அ அ- |

மதுரை-நத்தம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பந்தயம் சென்ற 14 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 9 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
மதுரை புது நத்தம் சாலையில் இரு சக்கர வாகனங்களில் பந்தயம் சென்றவா்களை தல்லாகுளம் போலீஸாா் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் செல்லூரைச் சோ்ந்த முகமது சலீம், உத்தங்குடியைச் சோ்ந்த ஹைதா் அலி, கோ.புதூரைச் சோ்ந்த முகமது ஆசியா, சையது சிராபுதீன், அப்துல் ரகுமான், அப்துல், முகமது அப்துல் ஹக்கீம், முகமது இப்ராஹிம், அப்துல் அஜீஸ், உத்தங்குடியைச் சோ்ந்த சல்மான் கான், ஆனந்தகுமாா், கோ.புதூரைச் சோ்ந்த அப்துல் ரசாக், முகமது சம்ஜாவுத், சிம்மக்கல்லைச் சோ்ந்த விஷ்ணு ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இந்த 14 பேரையும் கைது செய்து, பந்தயத்துக்கு பயன்படுத்திய 9 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.