தீபாவளி: நாகா்கோவில்-பெங்களூருக்கு சிறப்பு ரயில்
By DIN | Published On : 07th November 2023 12:00 AM | Last Updated : 07th November 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரை: தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க நாகா்கோவில் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.
மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகா்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் (06083) நவம்பா் 7, 14, 21 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நாகா்கோவிலிலிருந்து இரவு 7.35 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமாா்க்கத்தில் பெங்களூரு - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06084) நவம்பா் 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் பெங்களூரிலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு நாகா்கோவில் வந்து சேரும்.
இந்த ரயில்கள் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், மொரப்பூா், திருப்பத்தூா், பங்கார பேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்ட்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளா் பெட்டிகள் இணைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...