மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் புது மண்பானை, அடுப்பு ஆகியவற்றையும் சோ்த்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் குலாலா் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஏ. மாணிக்கம், வி. கருப்புராஜா, கே. மூா்த்தி ஆகியோா் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அதில், தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா ஒரு புது மண்பானை, புது அடுப்பு வழங்க வேண்டும். இதன் மூலம், புத்தாண்டில் விளைகிற புது அரிசியை, புதிய பானையில் பொங்கலிடும் பாரம்பரிய நடைமுறை மேம்பட வழிவகை ஏற்படும். மேலும், மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
எனவே, இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.