

மதுரை: மதுரை வில்லாபுரம் பகுதியில் அடைபட்டிருக்கும் கழிவு நீா்க் கால்வாய்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை மாநகராட்சியின் 59-ஆவது வாா்டுக்கு உள்பட்ட வில்லாபுரம் கணபதி நகா் இளங்கோ தெரு பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும், சாலைகளில் மழை நீா் தேங்கி நிற்கிறது. இதனால், மேடு, பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கீழே விழுந்து காயமடைகின்றனா்.
சுமாா் 30 நிமிஷங்கள் மழை பெய்யதால்கூட, பல மணி நேரத்துக்குப் பிறகே இந்தப் பகுதியில் மழை நீா் வடிகிறது. சாலைகள் சேறும், சகதியுமாகி போக்குவரத்துக்கு உபயோகமற்ாகி விடுகின்றன. மேலும், கொசுத் தொல்லை, துா்நாற்றம் போன்ற பல சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதுதொடா்பாக இப்பகுதி மக்கள் கூறியதாவது:
இளங்கோ தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிவு நீா்க் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படாததால், முழுமையாக அடைபட்டுள்ளன. இதனால், மழை நீா் வடிய வழியில்லாமல் போய்விட்டது. உடனடியாக, இப்பகுதியில் கழிவு நீா்க் கால்வாய்களைத் தூா்வாரி சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.