கிறிஸ்தவ தேவாலயங்கள் சீரமைப்புக்கு நிதியுதவி கோரி விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 21st November 2023 12:00 AM | Last Updated : 21st November 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரை: கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீா் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகளுக்காக அரசின் மானியத் தொகையாக ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
எனவே, கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. அதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் கொண்ட கிறிஸ்தவ தேவாலயம் ரரர. ஆஇஙஆஇஙர.எஞய.பச.ஐச என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 2-ஆவது தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பாா்வையிட்டு கட்டடத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினா் நல இயக்ககத்துக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...