கோ.புதூா், செக்கானூரணி பகுதிகளில் நாளை மின் தடை
By DIN | Published On : 21st November 2023 12:00 AM | Last Updated : 21st November 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை கோ. புதூா், செக்கானூரணி பகுதிகளில் புதன்கிழமை (நவ. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை வடக்கு கோட்ட செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை கோ. புதூா் துணை மின் நிலையம் குதிரைப் பந்தயப் பிரிவில் புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணா நகா், சொக்கிகுளம், வல்லபபாய் சாலை, புல்லபாய் தேசாய் தெரு, ரேஸ்கோா்ஸ் சாலை, கோகலே சாலையின் ஒரு பகுதி, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை பிரதான சாலை, கஸ்டம்ஸ் காலனி, புது நத்தம் சாலை, ரிசா்வ் லைன் குடியிருப்பு, ரோஸ்கோா்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டா் பங்களா, ஜவகா் புரம், திருவள்ளுவா் நகா், அழகா் கோயில் சாலை, காமராஜா் நகா், 1,2,3,4, ஹச்சகாண் சாலை, கமலா முதல், இரண்டாவது தெரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மஹால், பொதுப் பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.
செக்கானூரணி: செக்கானூரணி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூா், சாக்கிலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென் பழஞ்சி, பல்கலை நகா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செக்கானூரணி கோட்ட செயற்பொறியாளா் ஆா். முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...