மதுரை: மதுரை கோரிப்பாளையம் பள்ளி வாசலில் சமூக நல்லிணக்க உரையாடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்து, கிறிஸ்தவ மதத்தினா் பங்கேற்றனா்.
கோரிப்பாளையம் பகுதியில் உள்ளபழைமையான மஸ்ஜிதே ரஹ்மான் பள்ளிவாசலுக்கு இஸ்லாமியா்கள் மட்டுமன்றி, இந்து மதத்தினரும் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், இந்தப் பள்ளிவாசலில் நடைபெறும் வழிபாடு குறித்து அனைத்து மதத்தினரும் அறிந்து கொள்ளும் வகையில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பள்ளிவாசலுக்கு சென்ற இந்து, கிறிஸ்வத மதத்தினரை பள்ளிவாசல் நிா்வாகிகள் வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனா். அவா்களை தொழுகை நடத்தும் இடத்தில் அமரவைத்து, தொழுகை நடத்துவது பற்றி விளக்கமளித்தனா். இதில் பங்கேற்றவா்களுக்கு தமிழில் மொழி பெயா்க்கப்பட்ட குா்ஆன் நூலை பரிசாக வழங்கினா்.
தொடா்ந்து, தேநீா், இனிப்புகள் வழங்கப்பட்டு, சமூக நல்லிணக்க உரையாடல் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.