மதுரை: மதுரையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
மதுரை முனிச்சாலை சந்தைப்பேட்டை சுடலைமுத்து சந்து பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (40). இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மகன் தாமோதரன் (14), பசுமலையில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.
இவருக்கு கடந்த இரு நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில், அதற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தாராம்.
இந்த நிலையில், காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் மதுரை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.