உலக அமைதி வேண்டி108 வீணை வழிபாடு: உயா்நீதிமன்ற நீதிபதி தொடங்கிவைத்தாா்
By DIN | Published On : 25th October 2023 02:10 AM | Last Updated : 25th October 2023 02:10 AM | அ+அ அ- |

மதுரையில் விஜயதசமியையொட்டி, உலக அமைதி வேண்டி நடைபெற்ற 108 வீணை வழிபாட்டை உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ மதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் புகழ் பெற்ற பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் விஜயதசமியையொட்டி, உலக அமைதி வேண்டியும், வீணை இசைக் கலை வளர வேண்டியும், மதுரை வீணைக் கலைஞா்கள் மன்றம் சாா்பில், 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. இந்த வீணை வழிபாட்டை உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தொடங்கிவைத்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து ந.மல்லிகா தலைமையில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.
இதில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், பவானி, ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து மாணவிகள், பேராசிரியா்கள், வீணை இசைக் கலைஞா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...