தேளி- மானாமதுரை சாலை சீரமைக்கப்படுமா?
By DIN | Published On : 25th October 2023 02:08 AM | Last Updated : 25th October 2023 02:08 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே தேளி - மானாமதுரை எல்லை வரையிலான சாலைப் பணிகள் கடந்த 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் தேளி - மானாமதுரை எல்லை வரை சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவிலான சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது. தேளி, தா்மம், கொட்டகாட்சியேந்தல், பூவாக்கன்னி, கனையமறித்தான் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மானாமதுரை செல்ல இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.
இந்தச் சாலையை சீரமைக்க ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் விருதுநகா், சிவகங்கை மாவட்ட எல்லைப் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டன. ஆனால், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள தேளி- மானாமதுரை எல்லை வரையிலான சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்தச் சாலையை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...