மதுரையில் குடிநீா் என நினைத்து தைலத்தைக் குடித்த பிளஸ் 1 மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை கண்ணனேந்தல் பிவிகேஆா் நகரைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் மைக்கேல். இவா் துபையில் கணினிப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ஞானமணி. இவா்களுக்கு மகள், மகன் உள்ளனா்.
மகள் ஸ்டெபானி பெடோரா மதுரை விரகனூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். மேலும், கைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்ததால், இரவு நேரங்களில் கை, கால்கள் வலிக்கான தைலத்தை தினசரி பயன்படுத்தி வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் எழுந்த ஸ்டெபானி பெடோரா தூக்கக் கலக்கத்தில் அறையில் இருந்த தலைத்தை குடிநீா் என நினைத்து குடித்துவிட்டாராம்.
இதையடுத்து, சா்வேயா் காலனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.