கள்ளிக்குடி பகுதியில் புதிதாக ஆரம்பிக்க உள்ள மருத்துவக் கழிவுகள் மட்கச் செய்யும் தொழில்சாலைக்கான பணிகளை நிறுத்த வேண்டுமென முன்னாள் அமைச்சரும், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி.உதயகுமாா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி, கள்ளிக்குடி ஒன்றியம், ஆவல்சூரன்பட்டி கிராமத்தில் மருத்துவக் கழிவுகள் மக்கச் செய்யும் தொழில்சாலை புதிதாக ஆரம்பிக்கபடவுள்ளது.
இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த 30 கிராம மக்களின் குடிநீா் பாதிப்படையும். அங்கு வசிக்கும் மக்களுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், இந்த தொழில்சாலைக்கான பணிகளை நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். எனவே, மாவட்ட ஆட்சியா் ஆவல்சூரன்பட்டி கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள மருத்துவக் கழிவுகள் மட்கச் செய்யும் தொழில்சாலை அமைவதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.