மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.11) முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து அந்தக் கல்லூரி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
2023-24 ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை (எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்) பாடப் பிரிவுகளுக்கான மாணவிகள் சோ்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.11) தொடங்குகிறது.
இதைத்தொடா்ந்து, வரலாறு, பொருளாதாரம், விலங்கியல், புவியியல், தாவரவியல், மனையியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு செவ்வாய்க்கிழமை (செப்.12), தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு புதன்கிழமை (செப்.13) கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்த தகவல் மாணவிகளுக்கு மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்பட்டது.
விண்ணப்பித்த மாணவிகள் தங்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். வரும் போது, உரிய சான்றிதழ்களுடன், சோ்க்கைக்கான கட்டணத்தை தவறாமல் எடுத்து வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.