மதுரை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகள் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியா்கள் இருவா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 11 கடைகளின் ஊழியா்களிடமிருந்து ரூ. 64,900 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண் இயக்குநா் ச.விசாகன், மதுரையில் முகாமிட்டு டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்து வருகிறாா். இதேபோல, 3 சிறப்புக் குழுவினரும் ஆய்வுகளை மேற்கொண்டனா். அப்போது, 13 கடைகளில் கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 2 கடைகளின் விற்பனையாளா்கள் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டனா். 11 கடைகளின் ஊழியா்களிடமிருந்து ரூ. 64,900 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.